பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]29


     மண்ணுதல் புரிந்த வாண்மங் கலமுங்
     கோமக னடிமலர் குறுகலர் புனைய
     மாமதிற் குமரியொடு மணந்தமங் கலமுந்
     தொடர்ந்தெயில் கொண்டோன் சூழ்மதில் வேந்தன்
     மடந்தையை வேண்டிய மகட்பா லிகலுந்
     தூவடி வேலவன் றொகுத்த நிதியளந்து
     சேவடி வணங்கத் திறைகொண்டு பெயர்தலும்
     பேணா மன்னர் பெருமறங் காற்றி
     யாணை போக்கி யடிப்பட விருத்தலு
     மெம்மதி லுள்ள விகலுடை வேந்தரு
     மம்மதி லடியி னடைந்ததொகை நிலையுமென
     முரண்டரு புரிசை முற்றினன் கோட
     லிரண்டுதலை யிட்ட முப்பதிற்றுத் துறைத்தே.

     இது மேற்கூறிய உழிஞைப்பகுதி இரண்டனுள் முன்னையது
இத்துணைத்துறையுடைத்தென்கின்றது.

     (இ - ள்.) முடிமிசை உழிஞைசூடி ஒன்னார் கொடிநுடங்கெயில்
கொளக்குறித்த உழிஞை முதல் எம்மதிலுள்ள இகலுடை வேந்தரும்
அம்மதிலடியின் அடைந்த தொகைநிலை ஈறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டு துறையுடைத்தாம் மாறுபாட்டை விளைக்கும் மதிலைச்சென்ற
வேந்தன் முற்றிக்கோடல், எ - று.

   
 1. முடிமிசை உழிஞைசூடி ஒன்னார் கொடிநுடங்கெயில் கொளக்
குறித்த உழிஞைக்குச்
செய்யுள்:-

 
    “உழிஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர்
     விழுமதில் வெல்களிறு பாயக்-கழிமகிழ்
     வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே
     கொய்தார மார்பினெங் கோ”
                 [பு. வெ. உழி. 1]


எனவரும்.

    
2. குடைநாட்கோடற்குச் செய்யுள்:-

     “நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக
     கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக-வையகத்து
     முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த
     கொற்றக் குடைநாட் கொள”
                  [பு. வெ. உழி. 2]

எனவரும்.