|
3. வாணாட்கோடற்குச் செய்யுள்:-
“வாணாட் கொளலும் வழிமொழிந்துவந்தடையாப்
பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணா
ரணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப்
பிணிகொள்பே யாடும் பெயர்த்து” [பு. வெ. உழி. 3]
எனவரும்.
4. கடைநாட்பௌவத்ததிர் முரசுழிஞைக்குச் செய்யுள்:-
“கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
யுதிரா மதிலு முளகொ-லதிருமாற்
பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுண்
மாக்கண் முரச மழை” [பு. வெ. உழி. 4]
எனவரும்.
5. பற்றலர்மதில்கொளப் பரந்தெழுதானையொடு கொற்றவ
னெழுதரு கொற்ற உழிஞைக்குச் செய்யுள்:-
“வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான்
கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தா-னள்ளாதா
ரஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி
மஞ்சிவரு ஞாயின் மதில்”
[பு. வெ. உழி. 5]
எனவரும்.
6. மிகப்படுமூக்கமுதல் வேந்துறுதலில் அரண் அகப்படுமென்ற
அரசஉழிஞைக்குச் செய்யுள்:-
“ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி
யாக்க மவன்க ணகலாவால்-வீக்க
நகப்படா வென்றி நலமிகு தாராற்
ககப்படா வில்லை யரண்” [பு. வெ. உழி. 6]
எனவரும்.
7. வண்ணமலர்த்தார் மன்னனைச் சோவெறி கண்ணனென்
றேத்திய *கந்தழியுழிஞைக்குச் செய்யுள்:-
“அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
தின்றிவன் மாறா வெதிர்வார்யா-ரென்று
* கந்தழி - பற்றுக் கோடின்றிக் கட்புலனாகாப் பொருள். |