பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]31


     மடையார் மணிப்பூ ணடையாதரர் மார்பிற்
     சுடராழி நின்றெரியச் சோ”
                   [பு. வெ. உழி. 7]

எனவரும்.

    
8. இயங்கரண் அழித்தனன் இறையும் இது புனைந்தென
வயங்கிணருழிஞையை வழுத்துமுற்றுழிஞைக்குச்
செய்யுள்:-

    
“மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
     யியங்கரண மூன்று மெரித்தான்-றயங்கிணர்ப்
     பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானு
     மாக்கொ ளுழிஞை மலைந்து”
                 [பு. வெ. உழி. 8]

எனவரும்.

    
9. காந்தள் வேய்ந்தனன் சேந்தனும்போர்க்கெனின் வேந்தரி
லெவர்பூ விரும்பாரென்றற்குச்
செய்யுள்:-

    
“குருகு பெயரிய குன்றெறிந் தானு
     முருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற்
     கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
     போர்கருதி யார்மலையார் பூ”
                [பு. வெ. உழி. 9]

எனவரும்.

    
10. மறத்துறைமலிந்து மண்டிமாற்றார் விறற்கொடி மதிலின்
புறத்தொருங்கிறுத்தற்குச்
செய்யுள்:-

    
“புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
     பல்லார் மருளப் படைபரப்பி-யொல்லார்
     நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
     புறத்திறுத்தான் பூங்கழலி னான்”
             [பு. வெ. உழி. 10]

எனவரும்.

     
11. வாஅண்மறவர் வணங்கார் வைகிய நீஇண்மதிலின்
நிலையெடுத்தியம்பற்குச்
செய்யுள்:-

    
“மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
     கயிற்கழலார் கண்கனல் பூப்ப-வெயிற்கண்ணார்
     வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
     மாயப்போர் மன்னன் மதில்”
                 [பு. வெ. உழி. 11]

எனவரும்.