பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]33


     16. விண்டோயருமிளைக் கடந்து குண்டகழிப்புறத்து
வந்திறுததற்குச்
செய்யுள்:-

    
“கோள்வாய் முதலிய குண்டகழி நீராக
     வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தா-னீள்வாயி
     லோங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
     வாங்கொ லரிய வமர்”
                      [பு. வெ. உழி. 16]

எனவரும்.

    
17. போக்கருங்கிடங்கிற் பற்றலரொடுபொரூஉம் பாசிநிலைக்குச்
செய்யுள்:-

    
“நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதா
     ரோவார் விலங்கி யுடலவும்-பூவா
     ரகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
     பகழிவாய் வீழ்ந்தார் பலர்”
                  [பு. வெ. உழி. 17]

எனவரும். பாசிநிலைபோல் ஒழிப்பவும் ஒழியாது பொருதலிற் பாசி
நிலையாயிற்று. நாவாய் - ஓடம். தோணி - ஒரு மரத்தான் இயன்றது.

    
18. தொடுகழன்மறவர் துன்னித்துன்னார் இடுசூட்டிஞ்சியின் ஏணி
சார்த்தற்குச்
செய்யுள்:-

    
“கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
     விற்பொறியும் வேலும் விலக்கவும்-பொற்புடைய
     பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சார்த்தினா
     ரேணி பலவு மெயில்”
                       [பு. வெ. உழி. 18]

எனவரும். பாணிநடை - தாளத்திற்கொப்பச் சதிபாய்தல்.
 

     19. ஆடுதலொல்லா அரண்காவலவர் ஈடறவேணியின்

இவரெயிற்பாசிக்குச் செய்யுள்:-

 

     “சுடுமண் ணெடுமதில் சுற்றிப் பிரியார்
     கடுமுர ணெஃகங் கழிய-வடுமுர

     ணாறினா ரன்றி யரவு முடும்பும்போ
     லேறினா ரேணி பலர்”
                      [பு. வெ. உழி. 19]

எனவரும். எயிலைப் பாசிபோல விடாதுபற்றி ஏறுதலின் எயிற்பாசியாயிற்று.
அடுதல், ஆடுதலென விகாரமாய் நின்றது.