பக்கம் எண் :

34 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     20. வேஎய்பிணங்கிய மிளைசூழரணம் பாஅய்புள்ளிற் பாய்ந்த
மூதுழிஞைக்குச்
செய்யுள்:-

     “கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதுந்
     தோடுகொள் புள்ளின் *றொகையொப்பக்-கூடார்
     முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ள
     ரரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து”
         [பு. வெ. உழி. 20]

எனவரும்.

    
21. முரணகத்தவிய முதுசினஞ் சிறந்தோர ரணகத்தோரை
யடலகத்துழிஞைக்குச்
செய்யுள்:-

    
“செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க
     வங்கண் விசும்பி னணிதிகழுந்-திங்கண்
     முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி
     யகத்தாரை வென்றா ரமர்”
                  [பு. வெ. உழி. 22]

எனவரும்.

     22. அருமுரணதனால் அமர்வரவறியாச் செருமதிலோர்
சிறப்புரைத்த பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“அறியார் வயவ ரகத்திழிந்த பின்னு
     நெறியார் நெடுமதிலு ணேரார்-மறியாங்
     கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட்
     களியுறு காமங் கலந்து”
                     [பு. வெ. உழி. 22]

எனவரும்.

    
23. அகத்தோன்காலை அதிர்முரசியம்பப் புறத்தோன் வஞ்சினம்
புகன்முற்று முதிர்வுக்குச்
செய்யுள்:-

    
“காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
     வேலை விறல்வெய்யோ னோக்குதலு-மாலை
     யடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்
     தொடுகழலார் மூழை துடுப்பு”
                [பு. வெ. உழி. 23]

எனவரும்.

     24. மேவலர்க்கடந்து வெலற்கருங் காவலொடு
யானைகைக்கொண்ட யானைகைக்கோளுக்குச்
செய்யுள்:-

    
“ஏவ லிகன்மறவர் வீய விகல்கடந்து
     காவலும் யானையுங் கைக்கொண்டான்-மாவலான்

(பா - ம்) * றொகையேய்ப்ப