பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]35


     வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
     வம்புடை ஞாயி லரண்”
                     [பு. வெ. உழி. 24]

எனவரும்.

    
25. முற்றுவிட்டகல மற்றொரு வேந்தன் வெற்றியம்படை வரூஉம்
வேற்றுப்படை
வரவுக்குச் செய்யுள்:-

    
“உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி
     யவனென் றுலகேத்து மாண்மை-யிவனன்றி
     மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரண
     முற்றியார் முற்று விட”
                     [பு. வெ. உழி. 25]

எனவரும்.

    
26. எண்ணாராரெயில் கழுதையேரின் உண்ணாவரகுகொள்
உழுது வித்திடுதற்குச்
செய்யுள்:-

    
“எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
     கழுதையேர் கையொளிர்வேல் கோலா-வுழுததற்பின்
     வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
     கள்விரவு தாரான் கதம்”
                    [பு. வெ. உழி. 26]

எனவரும்.

    
27. புண்ணியநீரிற் புரையோரேத்த மண்ணுதல்புரிந்த வாண்மங்
கலத்திற்குச்
செய்யுள்:-*

    
“தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
     கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்து
     மிடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான்
     புடையா ரறையப் புகழ்”
                     [பு. வெ. உழி. 27]

எனவரும்.

    
28. கோமகனடிமலர் குறுகலர்புனைய மாமதிற்குமரியொடு
மணந்த மங்கலத்திற்குச்
செய்யுள்:-

    
“எங்கண் மலர வெயிற்குமரி கூடிய
     மங்கல நாள்யா மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச்
     செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
     மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி”
              [பு. வெ. உழி. 28]

எனவரும்.

   * புறநா. 95 - பாடாண்டிணை.