பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]37

 

விண்விருந் தாக விளிந்தமறப் பாசியு
மருமிளை யொடுகிடங் கழியா திகலி
யுருகெழு மறவ ருடன்றவூர்ச் செருவு
மாழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறன்மேம் படுத்தலு
மதிதொடு புரிசை வாமான் கடுப்பிற்
கெதிரன்மி னென்னு மிவுளி மறமும்
வாள்வடுப் பட்டும் வடுப்படா தகத்தோர்
தோள்வடுப் படப்பகை தொலைத்தவெயிற் போருந்
துணிவுடை யடுபடைத் தொடுகழன் மறவ
னணிமணி யெயின்மிசை யழிந்த நொச்சியு
மிழிபு மேன்மே லெழுதலு மிகலி
யழிபடை யானெறிந் தழிபடை தாங்கலும்
வெம்முர ணான்மகள் வேண்டலு மதனுக்
கம்மதி லோர்மறுத் துரைத்தலு மெனமுறை
கூறிய வொன்பதுங் குண்டக ழுடுத்த
வீறெயில் காத்தல் விரியெனப் படுமே.
 

     இது முற்கூறிய உழிஞைப்பகுதி இரண்டனுட் பின்னையது இத்துணைத்
துறையுடைத்தென்கிறது.*

     (இ - ள்.) ஏப்புழைஞாயி லேந்துநிலை யரணங் காப்போர் நொச்சிப்
பூப்புனைபுகழ்ச்சி முதல் வெம்முரணான் மகள் வேண்டலும் அதனுக்கு அம்
மதிலோர் மறுத்துரைத்தல் ஈறாக முறையேகூறிய ஒன்பது துறையும் ஆழ்ந்த
அகழியைப் பொருந்தின ஒப்பில்லாத எயில் காத்துக்கோடலின் விரியென்று
சொல்லப்படும், எ - று.

    
1. ஏப்புழைஞாயில் ஏந்துநிலையரணங் காப்போர்நொச்சிப்
பூப்புனை புகழ்ச்சிக்குச்
செய்யுள்:-

     “ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய
     கூடரணங் காப்போர் குழாம்புரையச்-சூடினா
     ருச்சி மதிவழங்கு மோங்கு மதில்காப்பா
     னொச்சி நுதிவே லவர்”
[பு. வெ. நொச். 1]

எனவரும்.


  
* இப்பகுதியை நொச்சி யென்பர் ஐயனாரிதனார்.