பக்கம் எண் :

38 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     2. துண்ணெனவரூஉந் தூசிதாங்கி விண்விருந்தாக விளிந்தமறப்
பாசிக்குச்
செய்யுள்:-

    
“பாயினார் மாயும் வகையாற் பலகாப்பு
     மேயினா ரேய விகன்மறவ-ராயினா
     ரொன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
     வென்றி யமரர் விருந்து”
                    [பு. வெ. நொச். 2]

எனவரும்.

    
3. அருமிளையொடுகிடங்கு அழியாதிகலி உருகெழுமறவர் உடன்ற
ஊர்ச்செருவுக்குச்
செய்யுள்:- *

    
“வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
     மிளையுங் கிடங்குஞ் சிதையத்-தளைபரிந்த
     நோனார் படையிரிய நொச்சி விறன்மறவ
     ரானா ரமர்விலக்கி யார்ப்பு”
               [பு. வெ. நொச். 3]

எனவரும்.

    
4. ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளைகாத்து வீழ்ந்தவேலோர்
விறன் மேம்படுத்தற்குச்
செய்யுள்:- 1

   
 “ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்
     காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார்
     மடங்க லனைய மறவேலோர் தத்த
     முடம்பொடு காவ லுயிர்”                
[பு. வெ. நொச். 4]

எனவரும்.

    
5. மதிதொடுபுரிசை வாமான்கடுப்பிற்கு எதிரன்மினென்னும்
இவுளிமறத்திற்குச்
செய்யுள்:- 2

    
“தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவி
     ரோங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர்
     மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றா
     ருயிருணிய வோடி வரும்”
                  [பு. வெ. நொச். 5]

எனவரும்.

  * செருமலைதல் - புறநா. 295.
  1 செருவிடை வீழ்வதுமிது - புறநா. 271, 272.
  2 புறநா. 273, 299, 302 - 304.