பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]39


     6. வாள்வடுப்பட்டும் வடுப்படாதகத்தோர் தோள்வடுப்படப் பகை
தொலைத்த எயிற்போர்க்குச்
செய்யுள்:-

    
“மிகத்தாய செங்குருதி மேவரு மார்பி
     னுகத்தா முயங்கியக் கண்ணு-மகத்தார்
     புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி
     மறத்திடை மானமேற் கொண்டு”
               [பு. வெ. நொச். 6]

எனவரும்.

    
7. துணிவுடையடுபடைத் தொடுகழன்மறவன் அணிமணி யெயின்
மிசை அழிந்த நொச்சிக்குச்
செய்யுள்:-

    
“அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
     புறத்தன போரெழிற் றிண்டோ-ளுறத்தழீஇத்
     தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
     வாட்குரிசில் வானுலகி னான்”
                 [பு. வெ. நொச். 7]

எனவரும்.

    
8. இழிபு மேன்மேல் எழுதலு மிகலி அழிபடையானெறிந்து அழி
படைதாங்கற்குச்
செய்யுள்:-


    
“பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தா
     ரெரிசெ யிகலரணங் கொண்மார்-புரிசை
     யகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
     மிகத்தடிந்தார் மேனின் றவர்”
                 [பு. வெ. நொச். 8]

எனவரும்.

    
9. வெம்முரணான் மகள் வேண்டலும் அதனுக்கு அம்மதிலோர்
மறுத்து உரைத்தபக்கத்திற்குச்
செய்யுள்:- *

    
“ஒள்வாண் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட்
     கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான்
     மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
     கருங்கண்ணி வெண்கட்டிற் கால்”
              [பு. வெ. நொச். 9]

எனவரும். (11)

  
* மகண்மறுத்தல் - புறநா. 109-111.