பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]41

 

யோம்படுத் துயர்த்திய தானை மறமும்
பூம்பொழிற் காவல் பூண்டமன் னவனை
யோம்படுத் துரைத்த மற்றதன் பகுதியும்
வண்ணவேற் றானை மறமிகுத் துரையா
வெண்ணல ரழிபினுக் கிரங்கிய பக்கமும்
யானை மறத்தொடு குதிரை மறமு
முன்னெழு வயப்படை தாங்குவல் யானென
மன்னவற் குரைத்த தூசி நிலையும்
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன்
றான்மீண் டெறிந்த மற்றதன் பகுதியு
முறிமலர் நறுந்தார் மொய்கழல் வேந்தன்
செறிமணித் தேர்மறஞ் சிறந்தமை கூறலு
மையல் யானை யெறிந்துமாய்ந் தோர்க்குக்
கைவல்யாழ்ப் பாணர் கடன்முறை கழித்தலு
மிருவர் தலைவர் தபுதிக் கண்ணும்
பொருபடை யகலாப் போர்புரி நிலையுங்
குருதிவே லொருவன் கூழை தாங்கி
யிரிபடைப் பின்னின்ற வெருமை மறமும்
வேற்படை களிற்றொடு போக்கிமெய் வலியி
னேற்றுடன் றடரு மேம வெருமையு
நேரலர் பனிப்ப நெஞ்சிடைக் குளித்த
கூரயில் பறித்துக் கைக்கொண்ட நூழிலு
மாறிரு வேந்தன் வயப்படை யுடைய
வேறிரித் தாடிய நூழி லாட்டு
மின்னவிர் கழலார் வேந்தன் வெஃறேர்
முன்ன ராடிய முன்றேர்க் குரவையு
மன்னரொடு விறலிய ராண்டகை நெடுந்தேர்ப்
பின்ன ராடிய பின்றேர்க் குரவையு
மன்னவ னூரு மறமிகு மணித்தேர்
பின்னு முன்னும் பேயாடு குரவையு
மொளிற்றெஃ கம்பட வீழ்ந்தவொண் மருப்பிற்
களிற்றுடன் கண்படு களிற்றுட னிலையும்
வடிவாள் விதிரா வயவர் மன்னவ
னுடனாட் டயர்ந்த வொள்வா ளமலையு