பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]43

 

             “வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையுங்
     கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான்-பல்புரவி
     நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
     பன்மணிப் பூணான் படைக்கு”
                  [பு. வெ. தும். 2]

எனவரும்.

     3. தாஞ்செருப்புரியாத் தன்மையாலவரை யோம்படுத்துயர்த்திய
தானைமறத்திற்குச்
செய்யுள்:- *

    
“கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்மு
     ளிழுதார்வேற் றானை யிகலிற்-பழுதாஞ்
     செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வ
     முயிர்காவ லென்னு முரை”
                     [பு. வெ. தும். 3]

எனவரும்.

    
4. பூம்பொழிற் காவல் பூண்டமன்னவனை ஓம்படுத்துரைத்த
மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:-

    
“வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளுஞ்
     செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி-யுயிர்மேற்
     பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க்
     குலகழியு மோர்த்துச் செயின்”
                  [பு. வெ. தும். 4]

எனவரும்.

    
5. வண்ணவேற்றானை மறமிகுத்துரையா எண்ணலரழிபினுக்கு
இரங்கிய பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
     யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி-னென்னாங்கொ
     லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப்
     பாழித்தோண் மன்னர் படை”
                   [பு. வெ. தும். 5]

எனவரும்.

    
6. யானைமறத்திற்குச் செய்யுள்:-

     “அடக்கருந் தானை யலங்குதார் மன்னர்
     விடக்கு முயிரு மிசையக்-கடற்படையுட்
     பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக்
     காயுங் கழலான் களிறு”
                        [பு. வெ. தும். 6]

எனவரும்.

  
* புறநா. 87-90, 170, 294, 300, 301.