|
7. குதிரைமறத்திற்குச்
செய்யுள்:- *
“குந்தங் கொடுவிற் குருதிவேல் கூடாதார்
வந்த வகையறியா வாளமருள்-வெந்திற
லார்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை
வார்கணையின் முந்தி வரும்” [பு. வெ. தும். 7]
எனவரும்.
8. முன்னெழுவயப்படை தாங்குவல்யானென மன்னவற் குரைத்த
தூசிநிலைக்குச் செய்யுள்:-
“உறுசுடர் வாளோ டொருகால் விலங்கிற்
சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டா-யெறிசுடர்வேற்
றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னொடு
பாங்கலா மன்னர் படை” [பு. வெ. தும். 8]
எனவரும்.
9. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழியொருவன்
தான்மீண்டெறிந்த மற்றதன் பகுதிக்குச் செய்யுள்:-
“காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே-தோலா
விலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
மலைபுரை யானை மறிந்து” [பு. வெ. தும். 9]
எனவரும்.
10. முறிமலர்நறுந்தார் மொய்கழல்வேந்தன் செறிமணித்தேர் மறஞ்
சிறந்தமை கூறற்குச்
செய்யுள்:-
“செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ள
மருமுர ணாழி தொடர-வருமரோ
கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தே
ரொட்டார் புறத்தின்மே லூர்ந்து” [பு. வெ. தும். 10]
எனவரும்.
11. மையல்யானை எறிந்துமாய்ந்தோர்க்குக் கைவல்யாழ்ப்பாணர்
கடன்முறைகழித்தற்குச் செய்யுள்:-
1
“தளரிய றாய்புதல்வர் தாமுண ராமைக்
களரிக் கனன்முழங்க மூட்டி-விளரிப்பண்
* புறநா. 273, 299, 302, 304.
1 பாண்பாட்டு-புறநா. 260, 284-311. |