|
கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து” [பு. வெ. தும். 11]
எனவரும்.
12. இருவர் தலைவர் தபுதிக்கண்ணும் பொருபடையகலாப்
போர்புரிநிலைக்குச்
செய்யுள்:-
“காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி
வேந்த ரிருவரும் விண்படர-வேந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
யிருபடையு நீங்கா விகல்” [பு. வெ. தும். 12]
எனவரும்.
13. குருதிவே லொருவன் கூழைதாங்கி இரிபடைப்பின்னின்ற
எருமைமறத்திற்குச்
செய்யுள்:-*
“கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றா-னடுங்கமரு
ளாள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
வாள்வெள்ளந் தன்மேல் வர” [பு. வெ. தும். 13]
எனவரும். எருமைபோலச் சிறக்கணித்து நிற்றலின் எருமைமறமாயிற்று.
14. வேற்படை களிற்றொடும் போக்கி மெய்வலியின் ஏற்றுடன்
றடரும் ஏமவெருமைக்குச் செய்யுள்:-
“மருப்புத்தோ ளாக மதவிடையிற் சீறிச்
செருப்புகன்று செங்கண் மறவன்-நெருப்பிமையாக்
கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு” [பு. வெ. தும். 14]
எனவரும்.
15. நேரலர்பனிப்ப நெஞ்சிடைக்குளித்த கூரெயில் பறித்துக்
கைக்கொண்ட நூழிற்குச் செய்யுள்:-
“மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை-வெய்ய
* புறநா. 80, 274, 275 பாடல்கள். |