|
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுட ரெஃகம் பறித்து” [பு. வெ. தும். 15]
எனவரும். நூழில் - கொன்றுகுவித்தல்.
16. மாறிருவேந்தன் வயப்படையுடைய வேறிரித்தாடிய
நூழிலாட்டிற்குச் செய்யுள்:- *
“ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர்
சூடன் மலைந்த சுழல்கட்பேய்-மீடன்
மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் மார்பந்
திறந்தவேல் கையிற் றிரித்து” [பு. வெ. தும். 15]
எனவரும்.
17. மின்னவிர்கழலார் வேந்தன்வெஃறேர் முன்னராடிய முன்றேர்க்
குரவைக்குச் செய்யுள்:-
“ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கு-நோனாக்
கழுமணிப் பைம்பூட் கழல்வேந்த னூருங்
குழுமணித் திண்டேர்க் கொடி” [பு. வெ. தும். 17]
எனவரும்.
18. அன்னரொடுவிறலிய ராண்டகை நெடுந்தேர்ப் பின்னராடிய
பின்றேர்க் குரவைக்குச் செய்யுள்:-
“கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்
வளையா வயவரும் பின்னாக்- கொளையாய்ந்
தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
திசைவிளங்குந் தானையான் றேர்” [பு. வெ. தும். 18]
எனவரும். கேள்வி - சுருதி.
19. மன்னவனூரும் மறமிகுமணித்தேர்ப் பின்னு முன்னும் பேயாடு
குரவைக்குச் செய்யுள்:-
“முன்னரும் பின்னரு மூரிக் கடற்றானை
மன்ன னெடுந்தேர் மறனேத்தி - யொன்னார்
நிணங்கொள்பேழ் வாய நிழல்போ னுடங்கிக்
கணங்கொள்பே யாடுங் களித்து” [பு. வெ. தும். 19]
எனவரும்.
* புறநா. 309, 310. |