பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]47


     20. ஒளிற்றெஃகம்பட வீழ்ந்த வொண்மருப்பிற் களிற்றுடன்
கண்படு களிற்றுடனிலைக்குச்
செய்யுள்:-*

    
“இறுவரை வீழ வியக்கற் றவிந்த
     தறுகட் டகையரிமாப் போன்றான்-சிறுகட்
     பெருங்கைக் களிறெறிந்து பின்னதன்கீழ்ப் பட்ட
     கருங்கழற் செவ்வே லவன்”
                    [பு. வெ. தும். 20]

எனவரும்.

    
21. வடிவாள்விதிரா வயவர் மன்னவன் உடனாட்டயர்ந்த
ஒள்வாளமலைக்குச்
செய்யுள்:-

    
“வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையா
     ராளமர் வென்றி யடுகளத்துத்-தோள்பெயராக்
     காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
     வேந்தொடு வெள்வாள் விதிர்த்து”
              [பு. வெ. தும். 21]

எனவரும்.

    
22. இருபாற்படையும் ஏத்த நெடுந்தகை பொருபோர்ப் பொலிந்த
தானைநிலைக்குச்
செய்யுள்:- 1

    
“நேரார் படையி னிலைமை நெடுந்தகை
     யோரா னுறைகழியா னொள்வாளுந்-தேரார்க்கும்
     வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்குங்
     கம்பமாய் நின்றான் களத்து”
                   [பு. வெ. தும். 22]

எனவரும்.

    
23. கணையும்வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்றவுயிரின்
நின்ற யாக்கை யிருநிலந்தீண்டா வெருவரு நிலைக்குச்
செய்யுள்:-

    
“வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
     வெங்கு மருமத் திடைகுளிப்பச்-செங்கட்
     புலவா ணெடுந்தகை பூம்பொழி லாகங்
     கலவாமற் காத்த கணை”
                      [பு. வெ. தும். 23]

எனவரும்.

    
24. அருவரைமார்பு தம் அலர்முலைகுளிப்பத் தெரிவையர்
முயங்கிய சிருங்காரநிலைக்குச்
செய்யுள்:-

  
* புறநா. 307.
   1 புறநா. 276
.