|
“எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத்
தங்கணவன் றார்தம் முலைமுகப்ப-வெங்கணைசேர்
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண்ணிடைப் பேரல்கு லார்” [பு. வெ. தும். 24]
னவரும்.
25. வாள்வாய்த்திட்ட வடுவாழ்யாக்கைக் கேள்கண்டு கலுழ்ந்த
உவகைக் கலுழ்ச்சிக்குச்
செய்யுள்:-*
“வெந்தொழிற் கூற்றமு நாணின்று வெங்களத்து
வந்த மறவர்கை வாடுமிப்பப்-பைந்தொடி
யாடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை
யோடரிக்கண் ணீரா யுக” [பு. வெ. தும். 25]
எனவரும்.
26. தம்முடையிறைவன் விசும்படைந்தானென வெம்முரணானுயிர்
வேள்வி வேட்டற்குச்
செய்யுள்:-
“வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா
மானமேநெய் யாக மறம்விறகாத்-தேனிமிருங்
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளம
ரொள்ளழலுள் வேட்டா னுயிர்” [பு. வெ. தும். 26]
எனவரும்.
27. காய்கதிர் நெடுவேற் கணவனைக்காணிய ஆயிழைசென்ற
பக்கத்திற்குச்
செய்யுள்:-
“கற்பின் விழுமிய தில்லைக் கடையிறந்
திற்பிறப்பு நாணு மிடையொழிய-நற்போ
ரணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான்
வணங்கிடை தானே வரும்” [பு. வெ. தும். 27]
எனவரும்.
28. இருபெரு வேந்தர் தாமுஞ்சுற்றமும் ஒருவருமொழியாத்
தொகைநிலைக்குச்
செய்யுள்:- 1
“மண்டமர்த் திண்டோண் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்டிரள்வேன் மன்னர் களம்பட்டார்-பெண்டிர்
* புறநா. 277, 278, 295.
1 புறநா. 62 63. |