பக்கம் எண் :

50 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

மன்னவ னணங்கா ரடுகளம் வேட்டலும்
வென்ற வேந்தன் மீளியந் தேர்முன்
னின்றுபே யாட னிகழ்த்திய குரவையும்
பெய்கழல் வேந்தன் பிறங்கொலித் தேர்ப்பின்
மொய்வளை விறலியர் வயவரோ டாடலு
மறுவகைப் பட்ட பார்ப்பன வாகையு
மிருமூன்று மரபி னேனோர் வாகையும்
புகழொடு பெருமையு நோக்கி யாரையு
மிகழே லென்ற பொருந வாகையு
முக்கால நிகழ்வு முறையுளி யறியுந்
தக்கோ னிலைபுக லறிவன் வாகையு
நாலிரு வழக்கிற் றாபத வாகையுங்
கூதிர் வாடை யென்றிரு பாசறைக்
காதலி னொன்றிக் கண்ணிய நிலைமையுந்
தண்ணளி பெருகத் தரையகம் புரக்கு
மண்ணலியல் புரைத்த வரச முல்லையு
நண்புறு பொருட்டா நடூவுநிலை யரசற்குப்
பண்புறச் சொல்லும் பார்ப்பன முல்லையு
மெட்டுவகை நுதலிய வவைய முல்லையும்
பனியும் வெயிலுங் கூதிரு மயர்வுந்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்தித்
*துணிவற் றகழ்ந்த கணிவன் முல்லையு
மேதமி லாடவர்க் கன்றி யிகன்மறம்
பேதையர்க் கும்புகன் மூதின் முல்லையு
மருஞ்சமம் வழிவழி யாற்றியே றுண்ட
விருங்குடி மறம்புக லேறாண் முல்லையு
மில்லும் பதியு மியல்புங் கூறி
வல்லோனை மிகுத்த வல்லாண் முல்லையுந்
தொடுகட லுலகினைத் துளங்கா திறைதன்
கடனெனக் காத்த காவன் முல்லையுந்
தக்கன பிறபிற சாற்றுமக் கூற்றொடு
மிக்ககள மரசுகொள் பேராண் முல்லையும்
வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவுங்

(பா - ம்) *தணிவற் றகழ்ந்த, தணிவுற் றறிந்த.