பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]51

 

கொள்ளாது மறவன் கொதித்தமற முல்லையுங்
குடைபுகழ் முல்லையுங் கண்படை நிலையு
மடல்கெழு மறவ ரவிப்பலி கொடுத்தலும்
வான்றோய் புகழொடு வயங்குமொரு நிலைமைச்
சான்றோர் நெறிபுகல் சால்பு முல்லையு
மலிவய லுழவனை வறுமைதீர் பெருவளம்
பொலிகெனக் கிணைவன் புகழ்ந்த களவழியு
மெய்யில் வையகத்து விழவினை யறுத்துப்
பொய்யி றத்துவப் பொருளொடு புகறலுங்
கவ்வைநோ யாக்கை கழியுமுன் னுலகத்
தவ்விய னோக்கி யருளொடு நீங்கலு
மென்றவெண் ணான்கு மியம்பிய வாகைக்
கொன்றிய துறையென வுணர்ந்தனர் கொளலே.

     இது முற்கூறிய வாகைத்திணை இத்துணைத்துறையுடைத் தென்கின்றது.

     (இ - ள்.) அலைகடற்றானை அரசட்டிறையோன் இகல்புனை வாகை
சூடல் முதலாய் ஈறாகிய கவ்வைநோயாக்கை கழியு முன்னுலகத்து
அவ்வியனோக்கி அருளொடுநீங்கலுமென்று சொல்லப்பட்ட முப்பத்திரண்டும்
மேற்கூறிய வாகைத்திணைக்குப் பொருந்திய துறையென அறிந்துகொள்க, எ-று.

     1. அலைகடற்றானை அரசட்டிறையோன் இகல்புனைவாகை
சூடற்குச்
செய்யுள்:-

     “சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும்
     பாடினார் வெல்புகழ் பல்புலவர்-கூடா
     ருடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூ
     ணடல்வேந்த னட்டார்த் தரசு”
                [பு. வெ. வாகை. 1]

எனவரும்.

     2. இகன்றோர் வெண்கண்ணியொடு கருங்கழல் செங்கச்சு
இனிப்புண்டவிர்ந்தாமெனப் புனைதரும் அரவத்திற்குச்
செய்யுள்:-

     “அனைய வமரு ளயில்போழ் விழுப்புண்
     ணினைய வினிக்கவலை யில்லைப்-புனைக