|
வழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு” [பு. வெ. வா. 2]
எனவரும்.
3. ஐவகைமரபின் அரசவாகைக்குச் செய்யுள்:-*
“காவ லமைந்தான் கடலுலகங் காவலா
லோவ லறியா துயிர்க்குவகை-மேவருஞ்சீ
ரைந்தொழி னான்மறை முத்தீ யிருபிறப்பு
வெந்திறற் றண்ணளியெம் வேந்து” [பு. வெ. வா. 3]
எனவரும். ஐந்தொழில் - ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல்,
பல்லுயிரோம்பல்.
4. மொய்கழலான்பதி முரசு நிலையுரைத்தற்குச் செய்யுள்:-
“மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய-நிதியம்
வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருண்
முழங்கு மதிரு முரசு” [பு. வெ. வா. 4]
எனவரும்.
5. மன்னனை யுழவனெனும் மறக்களவழிக்குச் செய்யுள்:-1
“அஞ்சுவருந் தானை யமரென்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்குஞ்-செஞ்சுடர்வேற்
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவ னல்கலா
னெங்கட் கடையா விடர்” [பு. வெ. வா. 5]
எனவரும்.
6. அன்னவன் அணங்கார் அடுகளம் வேட்டற்குச்
செய்யுள்:-
“பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து” [பு. வெ. வா. 6]
எனவரும். பிடித்தாடி - பலு.
7. வென்றவேந்தன் மீளியந்தேர்முன் நின்று பேயாடல் நிகழ்த்திய
குரவைக்குச்
செய்யுள்:-
“உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று
புலவாய புன்றலைப்பே யாடுங்-கலவா
* புறநா. 17, 19 முதலிய 36 பாடல்கள்.
1 ” 368-371, 373-இஃதேர்க்களவுருவகமெனினும் இழுக்காது.
இ. வி.-24 |