|
வரசதிர நூறி யடுகளம் வேட்டான்
முரசதிர வென்றதேர் முன்” [பு. வெ. வா. 7]
எனவரும்.
8. பெய்கழல்வேந்தன் பிறங்கொலித்தேர்ப்பின் மொய்வளை
விறலியர் வயவரோ டாடற்குச்
செய்யுள்:-
“வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரு
மஞ்சொல் விறலியரு மாடுபவே-வெஞ்சமத்துக்
குன்றே மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
பின்றேர்க் குரவை பிணைந்து” [பு. வெ. வா. 8]
எனவரும்.
9. அறுவகைப்பட்ட பார்ப்பன வாகைக்குச் செய்யுள்:-*
“ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினில்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கு-மேதஞ்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து” [பு. வெ. வா. 9]
எனவரும்.
அறுவகையாவன. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,
ஏற்றல் என இவை.
10. இருமூன்று மரபின் ஏனோர்வாகை இரண்டனுள் வாணிக
வாகைக்குச்
செய்யுள்:-
“உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுணர
வோதி யழல்வழிபட் டோம்பாத வீகையா
னாதி வணிகர்க் கரசு” [பு. வெ. வா. 10]
எனவரும்.
11. வேளாண்வாகைக்குச் செய்யுள்:-
“மூவரு நெஞ்சமர முற்றி யவரவ
ரேவ லெதிர்கொண்டு மீண்டுரையா-னேவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலு
ளுழுவா னுலகுக் குயிர்” [பு. வெ. வா. 11]
எனவரும்.
* புறநா. 166, 305. |