பக்கம் எண் :

54 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


    
12. புகழொடு பெருமைநோக்கி யாரையு மிகழேலென்ற பொருந
வாகைக்குச்
செய்யுள்:-

    
“வெள்ளம்போற் றானை வியந்து விரவாரை
     யெள்ளி யுணர்த லியல்பன்று-தெள்ளியா
     ராறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
     நீறுமேற் பூத்த நெருப்பு”
                       [பு. வெ. வா. 12]

எனவரும்.

    
13. முக்காலநிகழ்வு முறையுளியறியுந் தக்கோனிலைபுகல் அறிவன்
வாகைக்குச்
செய்யுள்:-

    
“இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போ
     லம்மூன்று முற்ற வறிதலாற்-றம்மி
     னுறழா மயங்கி யுறழினு மென்றும்
     பிறழா பெரியார்வாய்ச் சொல்”
                  [பு. வெ. வா. 13]

எனவரும்.

      உறழாமயங்கியுறழ்தலாவது, பால்புளித்தலும் பகலிருளலும் நால்வேதநெறி
தவறுதலும் முதலியவாம்.

    
14. நாலிருவழக்கிற் றாபத வாகைக்குச் செய்யுள்:-*
 
    
“நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
     சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
     கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
     வானகத் துய்க்கும் வழி”
                       [பு. வெ. வா. 14]

எனவரும்.

     1
5. கூதிர்வாடை யென்றிரு பாசறைக் காதலினொன்றிக் கண்ணிய
நிலைமை இரண்டனுட் (1) கூதிர்ப்பாசறைக்குச்
செய்யுள்:-

    
“கவலை மறுகிற் கடுங்கண் மறவ
     ருவலைசெய் கூரை யொடுங்கத்-துவலைசெய்
     கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
     மூதின் மடவாண் முயக்கு”
                      [பு. வெ. வா. 15]

எனவரும். உவலை - தழை.

     15. (2) வாடைப்பாசறைக்குச் செய்யுள்:-

    
 வாடை நலிய வடிக்கணா டோணசைஇ
     யோடை மழகளிற்றா னுள்ளான்கொல்-கோடன்

   * புறநா 251, 252.