பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]55


              முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
     பகையொடு பாசறையு ளான்”
                    [பு. வெ. வா. 16]

எனவரும்.

    
16. தண்ணளிபெருகத் தரையகம்புரக்கும் அண்ணலியல்புரைத்த
அரச முல்லைக்குச்
செய்யுள்:-

    
“செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி
     மயிர்க்கண் முரச முழங்க-வுயிர்க்கெல்லா
     நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
     காவலன் சேறல் கடன்”
                       [பு. வெ. வா. 17]

எனவரும்.

முயற்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை
முல்லையெனவும் கூறுபவாகலின், இவரும் வாகையென்றும் முல்லையென்றுங்
கூறினார்.

    
17. நண்புறுபொருட்டாய் நடுவுநிலையரசற்குப் பண்புறச் சொல்லும்
பார்ப்பனமுல்லைக்குச்
செய்யுள்:-

    
“ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
     நல்லிசை முச்செந்தீ நான்மறையோன்-செல்லலும்
     வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
     யென்றன்றி மீண்ட திலர்”
                      [பு. வெ. வா. 18]

எனவரும்.

    
18. எட்டுவகைநுதலிய அவையமுல்லைக்குச் செய்யுள்:-

    
“தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித்
     தொடைவிடை யூழிவை தோலாத்-தொடைவேட்
     டழிபட லாற்ற லறிமுறையென் றெட்டின்
     வழிபடர்தல் வல்ல தவை”
                      [பு. வெ. வா. 19]

எனவரும்.

    
எட்டாவன:-

     “குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை
     நடுச்சொல்லு நல்லணி யாக்கங்-கெடுக்கு
     மழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டு
     மிழுக்கா வவையின்க ணெட்டு”
                       [-,,-மேற்.]

என்பன.