|
19. பனியும் வெயிலுங் கூதிரும் அயர்வுந் துனியில்
கொள்கையொடு நோன்மையெய்தித் துணிவற்றகழ்ந்த
கணிவன்
முல்லைக்குச் செய்யுள்:-
“புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத்-திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி” [பு. வெ. வா. 20]
எனவரும்.
20. ஏதமிலாடவர்க்கன்றி யிகன்மறம் பேதையர்க்கும்புகன் மூதின்
முல்லைக்குச்
செய்யுள்:-
*
“வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து
வெந்திற லெஃக மிறைக்கொளீஇ-முந்தை
முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு” [பு. வெ. வா. 21]
எனவரும்.
21. அருஞ்சமம்வழிவழி ஆற்றியேறுண்ட இருங்குடி மறம்புகல்
ஏறாண் முல்லைக்குச்
செய்யுள்:- 1
“கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
யெய்போற் கிடந்தானென் னேறு” [பு. வெ. வா. 22]
எனவரும்.
22. இல்லும்பதியும் இயல்புங்கூறி வல்லோனை மிகுத்த வல்லாண்
முல்லைக்குச்
செய்யுள்:- 2
“வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறா அர்
முன்முன் முயலுகளு முன்றிற்றே-மன்முன்
வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி
யுரைமாலை சூடினா னூர்” [பு. வெ. வா. 23]
எனவரும்.
23. தொடுகடலுலகினைத் துளங்காதிறை தன்கடனெனக் காத்த
காவன்முல்லைக்குச்
செய்யுள்:-
“பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல்-விரும்பா
* புறநா. 279, 288 முதலிய 15 பாடல்கள்.
1 ” 86, 296.
2 ” 170, 178, 181, 313-322. |