பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]57


     னொருநாண் மடியி னுலகின்மே னில்லா
     திருநால் வகையா ரியல்பு”
                   [பு. வெ. வா. 24]

எனவரும். இருநால்வகை மேற்கூறிய குடிப்பிறப்பு முதலியன.

     தக்கனபிறபிறர் சாற்றுமக் கூற்றுக்குச் செய்யுள்:-

     “ஊறின் றுவகையுள் வைக வுயிரோம்பி
     யாறிலொன் றானா தளித்துண்டு-மாறின்றி
     வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலுந்
     தான்காவல் கொண்ட றகும்”               
[பு. வெ. வா. 25]

எனவரும்.

     24. மிக்க களமரசுகொள் பேராண் முல்லைக்குச் செய்யுள்:-

     “ஏந்துவாட் டானை யிரிய வுறைகழித்துப்
     போந்துவாண் மின்னும் பொருசமத்து-வேந்த
     ரிருங்களி யானை யினமிரிந் தோடக்
     கருங்கழலான் கொண்டான் களம்”          
[பு. வெ. வா. 26]

எனவரும்.

     25. வெள்வாள் வேந்தன் வேண்டியதீயவுங் கொள்ளாமறவன்
கொதித்த மறமுல்லைக்குச்
செய்யுள்:-

     “வின்னவி றோளானும் வேண்டிய கொள்கென்னுங்
     கன்னவி றிண்டோட் கழலானு-மன்னன்மு
     னொன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
     நின்றா னெடிய மொழிந்து”
                   [பு. வெ. வா. 27]

எனவரும்.

     26. குடைபுகழ் முல்லைக்குச் செய்யுள்:-

     “வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டந்
     தாய புகழான் றனிக்குடைக்குத்-தோய
     மெதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
     கதிர்வழங்கு மாமலை காம்பு”
                 [பு. வெ. வா. 28]

எனவரும். சுற்று - சுற்றுத்தாமம்.

     27. கண்படை நிலைக்குச் செய்யுள்:-

     “கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும்
     வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தர்க்குப்-பொங்கு