பக்கம் எண் :

58 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக்
     கனலா துயிலேற்ற கண்”
                     [பு. வெ. வா. 29]

எனவரும்.

    
28. அடல்கெழுமறவர் அவிப்பலி கொடுத்தற்குச் செய்யுள்:-

    
“சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
     மறந்தரு வாளம ரென்னும்-பிறங்கழலு
     ளாருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
     வீரியரெய் தற்பால வீடு”
                     [பு. வெ. வா. 30]

எனவரும்.

    
29. வான்றோய் புகழொடு வயங்குமொருநிலைமைச்
சான்றோர்நெறி புகல் சால்பு முல்லைக்குச்
செய்யுள்:-

    
“உறையார் விசும்பி னுவாமதி போல
     நிறையா நிலவுத லன்றிக்-குறையாத
     வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
     சங்கம்போல் *வான்மையார் சால்பு”
           [பு. வெ. வா. 31]

எனவரும்.

     30. மலிவயலுழவனை வறுமைதீர்பெருவளம் பொலிகெனக்
கிணைவன் புகழ்ந்த களவழிக்குச்
செய்யுள்:-

    
“பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
     யகடுபோ லங்கட் டடாரித்-துகடுடைத்துக்
     குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட
     வின்றுபோ மெங்கட் கிடர்”
                  [பு. வெ. வா. 32]

எனவரும்.

    
31. மெய்யில் வையகத்து விழைவினையறுத்துப் பொய்யில்
தத்துவப் பொருளொடு புகறற்குச்
செய்யுள்:-

    
“ஆமினி மூப்பு மகன்ற திளமையுந்
     தாமினி நோயுந் தலைவரும்-யாமினி
     மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த
     வையைந்து மாய்வ தறிவு”
                    [பு. வெ. வா. 33]

எனவரும்.

  
(பா - ம்) * வாய்மையார்.