ஐயைந்து-இருபத்தைந்து மெய்ப்பொருள்.
அவையாவன:-
1.
மெய் வாய் கண் மூக்குச் செவி-
ஆகிய பொறிகள் (அறிவுப் புலன்கள்)
5
2. நிலம் நீர் தீ வளி வெளி-
ஆகிய பூதங்கள் (உள் பொருள்கள்) 5
3.
சுவையொளியூறோசை நாற்றம்-
ஆகிய தன் மாத்திரைகள்
(பூதப்பண்புகள், அறிபுலன்கள்)
5
4.
சொல்கைகால் எருவாய் கருவாய்-
ஆகிய தொழிற்புலன்கள்
5
5.
மனம் அறிவு எண்ணம் முனைப்பு-
ஆகிய உள்ளுறுப்புகள்
4
உயிராகிய தலைவன்
1
ஆக மெய்ப்பொருள் 25
ஐயைந்தும் ஆய்தல் - புருடன் முதல் நிலன் ஈறாகக் கிடந்த
இருபத்தைந்து தத்துவங்களை ஆராய்தல்.
அது, மூலப்பகுதி ஒன்றில்
தோன்றிய
தன்மையிற் பகுதியேயாமெனவும், அதன்கண் தோன்றுவன
அதனைநோக்க
விகுதியாமெனவும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப்
பகுதியாமெனவும்,
அவற்றின்கண்
தோன்றிய மனமும்
ஞானேந்திரியங்களைந்துங்
கன்மேந்திரியங்களைந்தும் பூதங்களைந்துந் தங்கண்
தோன்றுவன இன்மையின்
விகுதியேயாமெனவும், புருடன்ஒன்றில்
தோன்றாமையானுந் தன்கண்
தோன்றுவன
இன்மையானும் அவை
இரண்டுமாகானெனவுந் தெரிதல்.
32. கவ்வைநோ யாக்கை கழியுமுன்னுலகத்து அவ்வியனோக்கி
அருளொடு நீங்கற்குச் செய்யுள்:-
“கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை
யியக்கிய யாக்கை யிறாமுன்-மயக்கிய
பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை
யுட்படாம் போத லுறும்” [பு. வெ. வா. 34]
எனவரும். (15) |