வடிசுடர் வேலோன் வாட்குடி யவர்க்குப்
படுசுட ரிமைக்கும் படைபல வழங்கலும்
வழங்கலு மறவரவ் வரிசை யேத்தித்
தழங்கொலி முரசிற் சாற்றிய பக்கமுந்
தாங்குவிறன் மறவர் தத்தந் தோள்வலி
வீங்குபடை நாப்பண் விளைத்தபெருங் காஞ்சியு
மருமுனை யிறுத்தோ னறைகூ வியபின்
செருமுனைச் செல்கெனச் செப்புவாள் செலவு
முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதியழல் வேலோன் குடைமுனைச் சேறலு
மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினக் காஞ்சியு
நேர்பொரு மள்ளர் நெடுங்குடை வேந்தன்
போரெதிர் பூக்கோ ணிலையு மதாஅன்று
தூசி தாங்கிவீழ் சுழல்விழி மறவ
னேசில்வான் றலைச்சிறப் பியம்புதலைக் காஞ்சியு
மந்தமில் பெருஞ்சிறப் பமர்வீ ழருந்தலை
தந்தவர்க் கீந்த தலைமா ராயமு
முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇத்
திறங்கொள்வேற் றரசருஞ் சென்னி துளக்க
மறங்க டாவிய வயங்குமறக் காஞ்சியும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியு மத்துறைக் கூற்று
மேமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேயோம் படுத்த பேயோம் புதலு
மாஅய களத்தி லவிந்தவா ளுழவர்க்குப்
பேஎ யஞ்சிய பேஎய்க் காஞ்சியும்
வியன்மனை விடலை விழுப்புண் காப்பவுந்
துயன்முலைப் பேஎய்மக டொட்ட காஞ்சியு
மின்னகை மனைவி பேஎய் புண்ணோற்
றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியு
மின்னனென் றிரங்கிய மன்னைக் காஞ்சியு
மன்னன்மற வர்க்குமட் டீந்தகட் காஞ்சியுங்