காதற் கணவனொடு கனையெரி மூழ்கு
மாதர் மலிபுரைந்த வாஞ்சிக் காஞ்சியு
மன்னுயிர் நீத்த வேலின் மனையோ
ளின்னுயிர் நீத்த வத்துறைப் பகுதியுங்
கறுத்தவா ளுழவனிக் கன்னியைத் தருகென
மறுத்துரை யாடிய மகட்பாற் காஞ்சியு
மன்னவ னிகன்மற மடங்கவே லிறைவன்
முன்னிருந் தருமுனை முரித்தமுன் னிருப்பு
மென்றுமுறை நவின்ற வெழுமூன்று நான்குஞ்
சென்றெதிர் காஞ்சித் திணையது விரியே.