பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]63


     3. வந்து புலத்திறுத்தோர் வரம்பு கடவாமை தந்தங்கடவை 
தழீஇயதழிஞ்சிக்குச்
செய்யுள்:-

     “குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி
     யுலாவு முழப்பொழிக வேந்தன்-கலாவு
     மினவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல்
     புனவேய் நரலும் புழை”
                     [பு. வெ. காஞ். 3]

எனவரும்.

     4. வடிசுடர்வேலோன் வாட்குடியவர்க்குப் படுசுடரிமைக்கும்
படை பல வழங்கற்குச்
செய்யுள்:-

     “ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
     வையிலை யெஃக மவைபலவு-மொய்யிடை
     யாட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
     வாட்குடி வன்க ணவர்க்கு”
                  [பு. வெ. காஞ். 4]

எனவரும்.

     5. வழங்கலுமறவரவ் வரிசையேத்தித் தழங்கொலிமுரசிற் சாற்றிய
பக்கத்திற்குச்
செய்யுள்:-

     “துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத்
     தன்னம ரொள்வாளென் கைதந்தான்-மன்னற்கு
     மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
     விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து”
       [பு. வெ. காஞ். 5]

எனவரும்.

     6. தாங்குவிறன்மறவர் தத்தந்தோள்வலி வீங்குபடை
நாப்பண்விளைத்த பெருங்காஞ்சிக்குச்
செய்யுள்:- *

     “வில்லார் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த
     கல்லா மறவர் கணைமாரி-யொல்லா
     வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லா
     மிருவி வரைபோன்ற வின்று”
                [பு. வெ. காஞ். 6]
 

னவரும். இருவி - தினைத்தாள்.

     7. அருமுனையிறுத்தோன் அறைகூவியபின் செருமுனைச்
செல்கெனச் செப்புவாள் செலவுக்குச்
செய்யுள்:-

     “உணங்கு புலவறா வொன்னார் குரம்பை
     நுணங்கரில் வெம்முனை நோக்கி-யணங்கிய

 

* புறநா. 194, 357, 359, 360, 362 - 366.