|
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள்” [பு. வெ. காஞ். 7]
எனவரும்.
8. முதுகுடிமறவர் முன்னுறச்சூழக் கொதியழல் வேலோன்
குடைமுனைச் சேறற்குச் செய்யுள்:-
“தெம்முனை தேயத் திறல்விலங்கு தேர்த்தானை
வெம்முனை வெற்றி விறல்வெய்யோன்-றம்முனை
நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்று
கூட்டிநாட் கொண்டான் குடை” [பு. வெ. காஞ்சி. 8]
எனவரும்.
9. இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ்சிறப்பின்
வஞ்சினக்காஞ்சிக்குச் செய்யுள்:-
*
“இன்று பகலோ னிறவாமு னொன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பி-னென்று
மரணவியப் பாயு மடையார்மு னிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து” [பு. வெ. காஞ். 9]
எனவரும்.
10. நேர்பொருமள்ளர் நெடுங்குடை வேந்தன் போரெதிர்
பூக்கோள் நிலைக்குச் செய்யுள்:-
1
“பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன
குருதியா றாவதுகொல் குன்றூர்-கருதி
மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார்
புறத்திறுத்த வேந்திரியப் பூ”
[பு. வெ. காஞ். 10]
எனவரும்.
11. தூசுதாங்கிவீழ் சுழல்விழிமறவன் ஏசில்வான்றலைச் சிறப்பு
இயம்பு தலைக்காஞ்சிக்குச்
செய்யுள்:-
“விட்டிடிலென் வேந்தன் விலையிடினெ னிவ்வுலகி
னிட்டுரையி னெய்துவ வெய்திற்றா-லொட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத்
தார்தாங்கி வீழ்ந்தான் றலை”
[பு. வெ. காஞ். 11]
எனவரும்.
* புறநா. 71-73.
1 ” 293 (பூக்கோட்காஞ்சி) |