|
12. அந்தமில் பெருஞ்சிறப் பமர்வீழருந்தலை தந்தவர்க்கீந்த
தலைமாராயத்துக்குச் செய்யுள்:-
“உவன்றலை யென்று முறழ்வின்றி யொன்னா
ரிவன்றலையென் றேத்த வியலு-மவன்றலை
தந்தார்க்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி
வந்தார்க் குவந்தீயும் வாழ்வு” [பு. வெ. காஞ். 12]
எனவரும்.
13. முலையுமுகனுஞ் சேர்த்திக்கொண்டோன் தலையொடு முடிந்த
நிலைக்குச் செய்யுள்:-
“கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன்
றலையானா டையலாள் கண்டே-முலையான்
முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே
யுயங்கினா ளோங்கிற் றுயிர்” [பு. வெ. காஞ். 13]
எனவரும்.
14. திறங்கொள் வேற்றரசருஞ் சென்னிதுளக்க மறங்கா டவிய
வயங்கு மறக்காஞ்சிக்குச் செய்யுள்:-
“கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
பருந்தோ டெருவை படர-வருந்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம்” [பு. வெ. காஞ். 14]
எனவரும்.
15. பண்புறவரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியுமத்துறைக்
கூற்றுக்குச் செய்யுள்:-
“நகையம ராய நடுங்க நடுங்கான்
றொகையம ரோட்டிய துப்பிற்-பகைவர்மு
னுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற்
பொங்கிப் பரிந்திட்டான் புண்”
[பு. வெ. காஞ். 15]
எனவரும்.
16. ஏமச்சுற்றமின்றிப் புண்ணோற்பே யோம்படுத்த
பேயோம்புதற்குச் செய்யுள்:-
“ஆயு மடுதிறலார்க் கன்பிலா ரில்போலுந்
தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப்-பேயுங் |