பக்கம் எண் :

66 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தா
     னுளம்புகல வோம்பா லுறும்”
                [பு. வெ. காஞ். 16]
 

எனவரும்.

     17. ஆஅயகளத்தில் அவிந்தவாளுழவர்க்குப் பேஎயஞ்சிய
பேஎய்க் காஞ்சிக்குச்
செய்யுள்:- *

     “கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்
     பெட்ப நகும்பெயரும் பேய்மக-ளுட்கப்
     புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து
     கனல விழிப்பவற் கண்டு”
                   [பு. வெ. காஞ். 17]

எனவரும்.

     18. வியன்மனைவிடலை விழுப்புண்காப்பவுந் துயன்முலைப்
பேஎய் மகள் தொட்டகாஞ்சிக்குச்
செய்யுள்:-

     “கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய்
     நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச்-சென்றொருத்தி
     யொட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலந்
     தொட்டாள் பெருகத் துயில்”
                [பு. வெ. காஞ். 18]

எனவரும்.

     19. இன்னகை மனைவி பேஎய்புண்ணோற்றுன்னுதல்கடிந்த
தொடாக் காஞ்சிக்குச்
செய்யுள்:-

     “ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூய்க்
     கொய்யாக் குறிஞ்சி பலபாடி-மொய்யிணர்ப்
     பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண் யாங்காப்பப்
     பேய்ப்பெண் பெயரும் வரும்”            
[பு. வெ. காஞ். 19]

எனவரும்.

     20. இன்னனென்றிரங்கிய மன்னைக்காஞ்சிக்குச் செய்யுள்:- 1

     “போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தானுவம
     னூர்க்கு முலகிற்கு மோருயிர்மன்-யார்க்கு
     மறந்திறந்த வாயி லடைத்ததா லண்ண
     னிறந்திறந்த நீளிலை வேல்”             
[பு. வெ. காஞ். 20]

எனவரும்.

     21. மன்னன் மறவர்க்கு மட்டீந்த கட்காஞ்சிக்குச் செய்யுள்:-

     “ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயின்

     மன்னன் மறவர் மகிழ்தூங்கா-முன்னே
 

   * புறநா. 281.
   1 ” 235.