|
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்” [பு. வெ. காஞ். 21]
எனவரும்.
22. காதற்கணவனொடு கனையெரிமூழ்கும் மாதர்மலிபுரைத்த
ஆஞ்சிக் காஞ்சிக்குச் செய்யுள்:-
“தாங்கிய கேளொடு தானு மெரிபுகப்
பூங்குழை யாயம் புலர்கென்னு-நீங்கா
விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
புலாழித் தலைக்கொண்ட புண்” [பு. வெ. காஞ். 22]
எனவரும்.
23. மன்னுயிர்நீத்த வேலின்மலையோள் இன்னுயிர்நீத்த
அத்துறைப் பகுதிக்குச் செய்யுள்:-
“கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ-னவ்வேலே
யம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று” [பு. வெ. காஞ். 23]
எனவரும்.
24. கறுத்தவாளுழவனிக் கன்னியைத் தருகென மறுத்துரையாடிய
மகட்பாற்காஞ்சிக்குச் செய்யுள்:-
*
“அளிய கழல்வேந்த ரம்மா வரிவை
யெளியளென் றெள்ளி யுரைப்பிற்-குளியாவோ
பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போற் பகழி கடிது” [பு. வெ. காஞ். 24]
எனவரும்.
25. மன்னவனிகல்மறம் மடங்கவேலிறைவன் முன்னிருந் தருமுனை
முசித்தமுன் னிருப்புக்குச் செய்யுள்:-
“கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக்
கொடிமலி கொல்களி றேவித்-துடிமகிழ
வார்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற்
பேர்த்திட்டான் பெய்கழலி னான்” [பு. வெ. காஞ். 25]
எனவரும். (17)
* புறநா. 336 - 354, 356. |