னியல்பினை மொழியு மத்துறைப் பகுதியு
நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்குங்
கடுந்தேர் மன்னவன் கண்படை நிலையு
மயில்வேன் மன்னனை யருளிய வெழுகெனத்
துயிலிடை யெடுப்பிய துயிலெடை நிலையுங்
கங்குற் கனைதுயி லெழுந்தோன் முன்னர்
மங்கலங் கூறிய மங்கல நிலையு
மன்னிய சிறப்பின் மங்கல மரபிற்
றுன்னின னென்ற வத்துறைப் பகுதியுந்
துளக்கமி லரசன் வெற்றி காட்டும்
விளக்குநிலை விளம்பிய விளக்கு நிலையு
மடரவிர் பைம்பூ ணரசன் றன்னைச்
சுடரொடு பொரூஉ மத்துறைப் பகுதியு
முவகையொடு வேந்த னொலிமறை யவர்க்குக்
கபிலை யீந்த கபிலை நிலையு
மந்தமில் புகழா னமரரவி முகப்ப
வெந்தீ வேட்ட வேள்வி நிலையு
மண்மிசைக் கொண்மூ மழைவளந் தருமென
விண்மிசைத் தோற்றிய வெள்ளி நிலையுந்
தாட்டாழ் தடக்கைத் தாம மார்ப
னாட்டுவள னுரைத்த நாடு வாழ்த்தும்
வாழ்மனை புகீஇ வைகறை முழக்கிய
கேழ்கிளர் கிணைவன் கிளந்த கிணைநிலையுஞ்
செங்களத் தீட்டிய செல்வம்வெண் டுறையாழ்
மங்கலப் பாணர் மறுத்த களவழியுங்
கூற்றிருந் தாலுங் கொலைவேன் மன்னவன்
வீற்றினி திருந்த பெருமங் கலமு
நெடுமதி லெறிந்த நிரைதார் மன்னன்
குடுமி களைந்த புகழ்சாற்று நிலையு
மிகலடு தடந்தோ ளெறிவே லிறைவன்
மகளிரொடு மணந்த மணமங் கலமுங்
கதமிக் கெழுபடைக் காவல் வேந்தன்
புதல்வற் பயந்த பொலிவுமங் கலமும்
வாட்படைத் தானை மன்னவன் பிறந்த