பக்கம் எண் :

70 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

நாட்சிறப் புரைத்த நாண்மங் கலமும்
விரைந்துகொடை பெற்றும் விடைபெறா திரவலன்
பரிந்துகடைக் கூட்டிய பரிசி னிலையும்
வண்புக ழறைந்தோர்க்கு மன்னவ னுதவிப்
பண்புற விடுத்த பரிசில் விடையு
நிறைவினை முற்றிய நீள்கழ லோன்மனை
யறன்மலி புரைத்த வாள்வினை வேள்வியுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு
மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றெதிரத் தெரித்த வாற்றுப் படையு
மொழியுமெங் கடுஞ்சொன் முறையுளி நிற்பின்
வழிபயன் படூஉமெனும் வாயுறை வாழ்த்தும்
புரையோர் நாப்ப ணவிதல் கடனெனப்
பெரியோர் பேணிய செவியறி வுறுவு
நாற்பெருந் திசையு நன்கினிது கவித்த
கோக்குடை பழிச்சுங் குடைமங் கலமுங்
காய்வார் காயக் கண்கனல் வேந்தன்
வாய்வா ளேத்திய வாண்மங் கலமு
மெண்ணருஞ் சீர்த்தி யிறையோ னெய்தி
மண்ணுதல் புரிந்த மண்ணு மங்கலமு
மறிவோர் வேந்தனுக் காய்ந்திவை செய்கென
வுறுதி கூறிய வோம்படை நிலையும்
வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப்
பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்து
மூவர் கொடியுளு மொன்றொடு பொரீஇ
மேவர வுரைத்த வியன்கொடி நிலையுஞ்
சோவினை யழித்த துளவணி மாயோன்
மேவரு விறலினை வியந்த கந்தழியு
மெரிசுடர் வேலற் கிளகிய வுள்ளத்
தரிமலர்க் கண்ணிய ராடிய வள்ளியும்
விரும்பிய தரூஉம் விண்ணவர் தம்முழை
யரும்பெறற் புலவரை யாற்றுப் படுத்தலும்
வீற்றதொன் றெய்துகம் வியனிலத் தியாமெனப்