பக்கம் எண் :

72 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     2. சேய்வரல்வருத்தம்வீட வாயில்காவலர்க் குரைத்த
கடைநிலைக்குச்
செய்யுள்:- *

     “நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
     யீட்டிய சொல்லா னிவனென்று-காட்டிய
     காயலோங் கெஃகிமைக்குங் கண்ணார் கொடிமதில்
     வாயிலோய் வாயி லிசை”
                       [பு. வெ. பா. 2]

எனவரும்.

     3. காவல்கண்ணிய கழலோன் கைதொழும் மூவரிலொருவனை
முறையுளி வாழ்த்தற்குச்
செய்யுள்:- 1

     “வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா
     ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய்-வெய்ய
     வடுந்திற லாழி யரவணையா யென்று
     நெடுந்தகை நின்னையே யாம்”
                   [பு. வெ. பா. 3]

எனவரும்.

     4. மாயோன்மேய மன்பெருஞ்சிறப்பிற் றாவாவிழுப்புகழ்ப் பூவை
நிலைக்குச்
செய்யுள்:- 2

     “பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோ
     யாவை விழுமிய யாமுணரே-மேவார்
     மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
     நிறத்தொடு நேர்தருத லான்”
                    [பு. வெ. பா. 4]

எனவரும்.

     5. ஒருவனையவனொடும் ஒழிந்த வானவரொடும் பொருவினன்
புகழ்ந்த மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:-

     “ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

     மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
     கடல்வளர் புரிவளை புரையு மேனி
     யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
     மண்ணுறு திருமணி புரையு மேனி
     விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
     மணிமயி லுயரிய மாறா வென்றிப்


   * புறநா. 127, 382-384, 391-396, 398.

   ஒன்றென முடித்தலாற் குடிநிலைவிடையும் (புறநா. 397) கொள்க.
   1 புறநா. 1 - கடவுள் (சிவபெருமான்) வாழ்த்து.
   2 ” 8, 56, 59, 374.