|
பிணிமுக வூர்தியொண் செய்யோ னும்மென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளுங்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலி
னாங்காங் கவரவ ரொத்தலின்
யாங்கு மரியவு முளவோ நினக்கே” [புறம். 56]
எனவரும்.
ஒன்றென முடித்தலான் இங்ஙனமன்றிக்,
[இன்னிசை வெண்பா]
“குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக்
கரந்த படியெமக்குக் காட்டாய்-மரம்பெறா
போரிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட
மார்பிற் கிடந்த மறு”
[முத்தொள்ளாயிரம் 63]
எனவும்,
[இன்னிசை வெண்பா]
“ஏற்றூர்தி யானு மிகல் வெம்போர் வானவனு
மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா
மாற்றல்சால் வானவன் கண்” [முத்தொள்ளாயிரம் 129]
எனவும்,
[நேரிசை வெண்பா]
“இந்திர னென்னி லிரண்டேக ணேறூர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை-யந்திரத்திற்
கோழியா னென்னின் முகனொன்றே கோதையை
யாழியா னென்றுணரற் பாற்று” [முத்தொள்ளாயிரம் 130]
எனவுஞ் சிறிது வேறுபட வருவனவெல்லாம் அதன்பாற் படுத்துக.
6. மண்ணகங்காவல் மன்னவன்முன்னர் எண்ணியபரிசில்
இதுவெனவுரைத்தற்குச் செய்யுள்:- *
“வரிசை கருதாது வான்போற் றடக்கைக்
குருசினீ நல்கயாங் கொள்ளும்-பரிசி
* புறநா. 126, 135 முதலிய 17 பாடல்கள். |