|
லடுகள மார்ப்ப வமரோட்டித் தந்த
படுகளி நால்வாய்ப் பகடு” [பு. வெ. பா. 5]
எனவரும்.
7. இன்னோரின்னவை கொடுத்தனர் நீயும்
அன்னர்போலருள்கெனும் இயன்மொழி வாழ்த்திற்குச்
செய்யுள்:- *
“முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையு
மெல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை
யிரவாம லீந்த விறைவர்போ னீயுங்
கரவாம லீகை கடன்” [பு. வெ. பா. 6]
எனவரும்.
8. மயலறுசீர்த்தி மான்றேர்மன்னன் இயல்பினை மொழியும்
அத்துறைப் பகுதிக்குச் செய்யுள்:-
“ஒள்வா ளமரு ளுயிரோம்பான் றானீயக்
கொள்வார் நடுவட் கொடையோம்பான்-வெள்வாள்
கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலோ
னொழியாமே யோம்பு முலகு” [பு. வெ. பா. 7]
எனவரும்.
9. நெடுந்தேர்த்தானை நீறுபடநடக்குங் கடுந்தேர் மன்னவன்
கண்படை நிலைக்குச் செய்யுள்:-
“மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென்றடக்கிக்-கோலாற்
கொடிய வுலகிற் குறுகாம லெங்கோன்
கடிய துயிலேற்ற கண்” [பு. வெ. பா. 8]
எனவரும்.
10. அயில்வேன் மன்னனை அருளியவெழுகெனத் துயிலிடை
யெடுப்பிய துயிலெடைநிலைக்குச் செய்யுள்:-
“அளந்த திரையா ரகலிடத்து மன்னர்
வளந்தரு வேலோய் வணங்கக்-களந்தயங்கப்
பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத்
தூமலர்க்க ணேற்க துயில்” [பு. வெ. பா. 9]
எனவரும்.
* புறநா. 8, 9, 10 முதலிய 58 பாடல்கள். |