11. கங்குற்கனைதுயில் எழுந்தோன்முன்னர் மங்கலங்கூறிய மங்கல நிலைக்குச் செய்யுள்:- "விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு மண்வேண்டிற் கைகூப்பன் மங்கலம்-பெண்வேண்டிற் றுன்னன் மடவார்க்கு மங்கலந் தோலாப்போர் மன்னன் மலைபுரையு மார்பு" [பு. வெ. பா. 10] எனவரும். 12. மன்னிய சிறப்பின் மங்கலமரபிற் றுன்னின னென்ற அத்துறைப் பகுதிக்குச் செய்யுள்:- "தீண்டியுங் கண்டும் பயிற்றியுந் தன்செவியால் வேண்டியுங் கங்குல் விடியலு-மீண்டிய மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து" [பு. வெ. பா. 11] எனவரும். 13. துளக்கமிலரசன் வெற்றிகாட்டும் விளக்குநிலை விளம்பிய விளக்குநிலைக்குச் செய்யுள்:- "வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி யொளிசிறந் தோங்கி வரலா-லளிசிறந்து நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு" [பு. வெ. பா. 12] எனவரும். 14. அடரவிர்பைம்பூண் அரசன்றன்னைச் சுடரொடுபொரூஉம் அத்துறைப் பகுதிக்குச் செய்யுள்:- "வெய்யோன் கதிர்விரிய விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி மறைந்தாங்கு-வையகத்துக் கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின் வேத்தவையுண் மையாக்கும் வேந்து" [பு. வெ. பா. 13] எனவரும். மையாத்தல்-புற்கென்றல். 15. உவகையொடுவேந்தன் ஒலி மறையவர்க்குக் கபிலையீந்த கபிலைநிலைக்குச் செய்யுள்:- "பருக்காழுஞ் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக் குருக்கட் கபிலை கொடுத்தான்-செருக்கோ |