|
டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன்
கடிமுரசங் காலை செய” [பு. வெ. பா. 14]
எனவரும்.
16. அந்தமில்புகழான் அமரரவிமுகப்ப வெந்தீவேட்ட வேள்வி
நிலைக்குச் செய்யுள்:- *
“கேள்வி மறையோர் கிளைமகிழ்த லென்வியப்பாம்
வேள்வி விறல்வேந்தன் றான்வேட்ப-நீள்விசும்பி
னீர்ந்தா ரிமையோரு மெய்தி யழல்வாயா
லார்ந்தார் முறையா லவி” [பு. வெ. பா. 15]
எனவரும்.
17. மண்மிசைக் கொண்மூ மழைவளந்தருமென விண்மிசைத்
தோற்றிய வெள்ளி நிலைக்குச் செய்யுள்:-
“சூழ்கதிர் வான்விளக்கும் வெள்ளி சுடர்விரியத்
தாழ்புயல் வெள்ளந் தருமரோ-சூழ்புரவித்
தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்கு வேலோய்நின்
மார்பிற்றார் கோலி மழை” [பு. வெ. பா. 16]
எனவரும்.
18. தாட்டாழ்தடக்கைத் தாமமார்பன் நாட்டுவளனுரைத்த நாடு
வாழ்த்திற்குச் செய்யுள்:-
“எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற்
கண்ணின் மலரக் கருநீலம்-விண்ணின்
வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வே
னகைத்தாரான் றான்விரும்பு நாடு” [பு. வெ. பா. 17]
எனவரும்.
இடரெட்டாவன:-
[குறள் வெண்பா]
“விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு
நட்டம் பெரும்பெயல்கா லெட்டு” 1
என இவை.
* புறநா. 372 - மறக்களவேள்வி.
(பா - ம்). 1 காற்றெட்டு. |