பக்கம் எண் :

78 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     ராரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட்
     கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி”
                [பு. வெ. பா. 22]

எனவரும்.

    
24. கதமிக்கெழுபடைக் காவல்வேந்தன் புதல்வற்பயந்த பொலிவு
மங்கலத்திற்குச்
செய்யுள்:-

    
“கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
     பெருங்கட் புதல்வன் பிறப்பப்-பெரும்பெயர்
     விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினா
     ரெண்ணா ரவிந்தா ரிகல்”
                      [பு. வெ. பா. 23]

எனவரும்.

    
25. வாட்படைத்தானை மன்னவன் பிறந்த நாட்சிறப்புரைத்த நாண்
மங்கலத்திற்குச்
செய்யுள்:-

    
“கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
     விரும்பி மகிழ்தல் வியப்போ-சுரும்பிமிர்தார்
     வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
     தம்மதி றாந்திறப்பர் தாள்”
                     [பு. வெ. பா. 24]

எனவரும்.

 

      26. விரைந்து கொடைபெற்றும் விடைபெறாதிரவலன் பரிந்து
கடைக் கூட்டிய பரிசினிலைக்குச்
செய்யுள்:- *

     
“வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்
     நல்கிய பின்னு நனிநீடப்-பல்போர்
     விலங்குங் கடற்றானை வேற்றார் முனைபோற்
     கலங்கு மளித்தென் கடும்பு”                 
[பு. வெ. பா. 25]

எனவரும்.

    
27. வண்புகழறைந்தோர்க்கு மன்னவனுதவிப் பண்புறவிடுத்த
பரிசில்விடைக்குச்
செய்யுள்:-1

    
“படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரு
     நடைநவின்ற பாய்மாவு நல்கிக்-கடையிறந்து
     முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற்
     பின்வந்தான் பேருளி னான்”
                   [பு. வெ. பா. 26]
 

எனவரும்.

  
* புறநா. 163.
   1 ” 140, 152, 162, 165, 397, 399.