28. நிறைவினை முற்றிய நீள்கழலோன்மனை அறன்மலியுரைத்த ஆள்வினைவேள்விக்குச் செய்யுள்:- "நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகி லொன்ற வுயிர்களிப்ப வோம்பலால்-வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னு மாள்வினை வேள்வி யவன்" [பு. வெ. பா. 27] எனவரும். 29. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறீஇச் சென்றெதிரத் தெரித்த ஆற்றுப்படையும் என்புழிக் கூத்தராற்றுப்படைக்குச் செய்யுள்:- "கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின் றலைவ தவிராது சேறி-சிலைகுலாங் காரினை வென்ற கவிகையான் கைவளம் வாரினை கொண்டு வரற்கு" [பு. வெ. பா. 29] எனவரும். பாணராற்றுப்படைக்குச் செய்யுள்:- * "இன்றொடை நல்லிசையாழ்ப் பாணனீ யெம்மேபோற் கன்றுடை வேழத்த கான்கடந்து-சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கயமலராத் தாமரை சென்னி தரும்" [பு. வெ. பா. 28] எனவரும். பொருநராற்றுப் படைக்குச் செய்யுள்:- "தெருவி னலமருந் தெண்கட் டடாரிப் பொருவில் பொருநநீ செல்லிற்-செருவி லடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயு நெடுந்தடக்கை யானை நிரை" [பு. வெ. பா. 30] எனவரும். விறலியாற்றுப் படைக்குச் செய்யுள்:- 1 "சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான் பல்புகழ் பாடிப் படர்தியே-னல்லவையோ ரேத்த விழையணிந் தின்னே வருதியாற் பூத்த கொடிபோற் பொலிந்து" [பு. வெ. பா. 31] எனவரும். * புறநா. 68-70, 138, 141, 155, 180. 1 " 64, 103, 105, 133. |