பக்கம் எண் :

80 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     30. மொழியுமெங்கடுஞ்சொல் முறையுளிநிற்பின் வழிபயன் படூஉ
மெனும் வாயுறை வாழ்த்துக்குச்
செய்யுள்:-

    
“எஞ்சொல் லெதிர்கொண் டிகழான் வழிநிற்பிற்
     குஞ்சர வெல்படையான் கொள்ளானோ-வெஞ்சு
     மிகலிட மின்றி யெறிமுந்நீர் சூழ்ந்த
     வகலிட மங்கை யகத்து”
                      [பு. வெ. பா. 32]

    
31. புரையோர்நாப்பண் அவிதல்கடனெனப் பெரியோர் பேணிய
செவியறி வுறுவிற்குச்
செய்யுள்:-

    
அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர்
     தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே-முந்தை
     வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
     மொழிநின்று கேட்டன் முறை”
                [பு. வெ. பா. 33]

எனவரும்.

    
“கோளிற் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
     றாளை வணங்காத் தலையென்ப-வாளிய
     லாளுடைப் பேரடிக ணாவரையர் பிள்ளையா
     ராளுங் கழறிற் றறிவாரே-யாளுடை
     நம்பிமெய் கண்டார் நல்லருள் வள்ளலார்
     நம்பனை வணங்கினர் நளியத்
     தம்பொறி கொண்மியா தவத்திருப் பிறவியாய்”
                  
[சேயொளி பாடிய செவியறிவுறூஉ மருட்பா 9]

இதுவுமது.

    
32. நாற்பெருந்திசையும் நன்கினிதுகவித்த கோக்குடைபழிச்சுங்
குடைமங்கலத்திற்குச்
செய்யுள்:- *

    
“தன்னிழலோ ரெல்லோர்க்குந் தண்கதிராந் தற்சேரா
     வெந்நிழலோ ரெல்லோர்க்கும் வெங்கதிரா-முன்னிலைவேல்
     மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன்
     கோவா யுயர்த்த குடை”
                     [பு. வெ. பா. 34]

எனவரும். கோவாய் - அரசுதொழிற்கு அமைந்த தாய்.

    
33. காய்வார்காயக் கண்கனல் வேந்தன் வாய்வாளேந்திய
வாண்மங்கலத்திற்குச்
செய்யுள்:- 1

      
“கொங்கவி ழைம்பான் மடவார் வியன்கோயின் மங்கலங் கூற
மறங்கனலுஞ்-செங்கோ

  
* புறநா. 60. 1 புறநா. 95.