பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]81

 

     னிலந்தரியச் செல்லு நிரைதண்டார்ச் சேரன்
     வலந்தரிய வேந்திய வாள்"
                     [பு. வெ. பா. 35]

எனவரும்.

    
34. எண்ணருஞ்சீர்த்தி இறையோ னெய்தி மண்ணுதல் புரிந்த
மண்ணு மங்கலத்திற்குச்
செய்யுள்:-

    
"கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாண்
     மங்கலங் கூற மலிவெய்திக்-கங்கையாள்
     பூம்புன லாகங் கெழீஇயினான் போரடுதோள்
     வேம்பார் தெரியலெம் வேந்து"
                 [பு. வெ. பா. 36]

எனவரும்.

    
35. அறிவோர் வேந்தனுக்கு ஆய்ந்திவைசெய்கென உறுதிகூறிய
ஓம்படைநிலைக்குச்
செய்யுள்:-

    
"ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
     வென்று களங்கொண்ட வேல்வேந்தே-சென்றுலா
     மாழ்கடல்சூழ் வையகத் தைந்துவென் றாறகற்றி
     யேழ்கடிந் தின்புற் றிரு"
                       [பு. வெ. பா. 37]

எனவரும்.

     ஒன்று - மெய்யுணர்தல். இரண்டு - தானும், தலைவனும். மூன்று -
காமம், வெகுளி, மயக்கம். நான்கு - ஒழுக்கம், நோன்பு, செறிவு, அறிவு.
ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஆறு - படை, குடி, கூழ்,
அமைச்சு, நட்பு, அரண். ஏழ் - எழுச்சி, பிறப்பு; எழுபிறப்பும் விளைவிக்கும்
வித்தாகிய அவா. என்னை? ஆசிரியர் திருவள்ளுவரும்,

    
"அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
     தவாஅப் பிறப்பீனும் வித்து" -
                     [குறள். 361]

என்றாராகலின்.

     ஒன்று - ஞானம்; ஆன்மா என்றுமாம். இரண்டு - காரணகாரியங்கள்;
புண்ணியபாவம் என்றுமாம். மூன்று - நட்புப் பகை நொதுமல். உச்சாகசத்தி,
பிரபுசத்தி, மந்திரசத்தி என்றுமாம். நான்கு - யானை, தேர், குதிரை, காலாள்;
சாம தான பேத தண்டம் என்றுமாம். ஐந்து - செவி, மெய், கண், வாய், மூக்கு
எனப் பெயரிய பொறிகள். ஆறும் ஏழும்.

[நேரிசை வெண்பா]

     "[நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை
     கூடி னரைப்பிரித்தல் கூட்டலா] - [றீடிலா