|
வேட்டங் கடுஞ்சொல் மிகுதண்டஞ் சூதுபொரு
ளீட்டங்கட் காமமிவை யேழ்]”
என முறையே இவையாம்.
36. வழிபடுதெய்வ நிற்புறங்காப்பப் பொலிமினென்னும் புறநிலை
வாழ்த்திற்குச்
செய்யுள்:-
“கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக்
கடிபடு கொன்றையான் காப்ப-நெடிதுலகிற்
பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற
மாமலைபோன் மன்னுக நீ”
[பு. வெ. பா. 38]
எனவரும்.
37. மூவர்கொடியுளும் ஒன்றொடு பொரீஇ மேவரவுரைத்த வியன்
கொடிநிலைக்குச்
செய்யுள்:-
“பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல-வோங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி” [பு. வெ. பா. 39]
எனவரும்.
38. சோவினையழித்த துளவணி மாயோன் மேவருவிறலினை
வியந்த கந்தழிக்குச்
செய்யுள்:-
“மாயவன் மாய மதுவான் மணிநிரையு
ளாயனா வெண்ண லவனருளான்-காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ” [பு. வெ. பா. 40]
எனவரும்.
39. எரிசுடர்வேலவற்கு இளகியவுள்ளத் தரிமலர்க்கண்ணியர்
ஆடிய வள்ளிக்குச் செய்யுள்:-
“வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே
யீண்டியம் விம்ம வினவளையார்-பூண்டயங்கச்
சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
வேலனோ டாடும் வெறி” [பு. வெ. பா. 41]
எனவரும். |