|
40. விரும்பிய தரூஉம் விண்ணவர்தம்முழை அரும்பெறற் புலவரை
ஆற்றுப்படுத்தற்குச்
செய்யுள்:-
*
“வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி
னெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
கிருளீயும் ஞாலத் திடரெல்லா நீங்க
வருளீயு மாழி யவன்” [பு. வெ. பா. 42]
எனவரும்.
41. வீற்றதொன்றெய்துகம் வியனிலத்தியாமெனப் போற்றரு
மிறைக்கெதிர் புகழ்ந்தனர்
பரவற்குச் செய்யுள்:-
“சூடிய வான்பிறையோய் சூழ்சுடலை நீற்றரங்கத்
தாடி யசையா வடியிரண்டும்-பாடி
யுரவுநீர் ஞாலத் துயப்போக வென்று
பரவுதும் பல்காற் பணிந்து” [பு. வெ. பா. 43]
எனவரும்.
42. விடுசுடரெறிக்கும் மேனிவானவனைப் படுபயன்கருதிப்
பழிச்சினர் பணிதற்குச் செய்யுள்:-
1
“ஆட லமர்ந்தா னடியடைந்தா ரென்பெறா
ரோடரி யுண்க ணுமையொருபாற்-கூடிய
சீர்சா லகலத்தைச் செங்க ணழனாகந்
தாராய்த் தழுவப் பெறும்” [பு. வெ. பா. 44]
எனவரும்.
43. மருமலர்க்கோதை மடவரறலைவன் விரிமலர்த்தாமம் விழைந்த
கைக்கிளைக்குச்
செய்யுள்:-
“மங்குன் மனங்கவர மான்மாலை நின்றேற்குப்
பொங்கு மருவிப் புனனாடன்-கங்குல்
வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித்
தருவான்கொன் மார்பணிந்த தார்” [பு. வெ. பா. 45]
எனவரும்.
44. அல்லிடை விரும்பாது அவன் முயக்கமர்ந்து செல்பவன்
செல்வகை தெரிந்தபெருந்திணைக்குச்
செய்யுள்:-
“வயங்குளைமான் றென்னன் வரையகலந் தோய
வியங்கா விருளிடைச் செல்வேன் - மயங்காமை
* புறநா. 48, 49, 141.
1 ” 83 - 85. |