பக்கம் எண் :

84 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


    
யோடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னின்றான்
     மாட மறுகின் மழை”
                         [பு. வெ. பா. 46]

எனவரும்.

    
45. வில்லேர்நுதலி விறலோன் மார்பம் புல்லேம் யாமெனப்
புலந்த புலவிக்குச்
செய்யுள்:-

    
“மலைபடு சாந்த மலர்மார்ப யாநின்
     பலர்படி செல்வம் படியேம்-புலர்விடியல்
     வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
     கண்டனங் காண்டற் கினிது”
                   [பு. வெ. பா. 47]

எனவரும். இம்மூன்றும் பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக்
கூறலின் அகமாகாது புறமாயின.

    
46. படிமிசையியங்காப் பணிமொழி மகளிர் கடவுளை நயந்த
கடவுட் பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே
     லொல்கெனி னுச்சியா ணோமென்னு-மல்கிரு
     ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை
     யூட லுணர்த்துவதோ ராறு”
                     [பு. வெ. பா. 48]


எனவரும்.

    
47. பூதலத்தரிவையர் பொருவில் வானவரைக் காதலித்துரைத்த
கடவுட் பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாசம்
     புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு
     பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரெ
     னுண்ணலங் கூட்டுண்டா னூர்”
                  [பு. வெ. பா. 49]


எனவரும்.

    
இதுவுமது:-

              [அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்]

    “யான்செய் தவத்தின் பெரும்பயனே
          யென்னா ரமுதே யென்றுணையே
     வான்செய் யரசே திருவொற்றி
          வள்ளால் வந்த தென்னென்றேன்

   இ. வி. -26