|
35. ஏராரகட்டூரெய்திய காதலன் வாராமுன்கார்வந்த கார்
முல்லைக்குச்
செய்யுள்:-
“புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
துனையுந் துணைபடைத் துன்னார்-முனையு
ளடன்முகந்த தானை யவர்வாரா முன்னங்
கடன்முகந்து வந்தன்று கார்”
[பு. வெ. முல். பொது. 2]
எனவரும்.
36. வார்கழற்பகைஞரை வணக்கய மன்னவன் தேர்வரவுரைத்த
தேர்முல்லைக்குச்
செய்யுள்:-
“தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையு
ளூர்ந்துநங் கேள்வ ருழைவந்தார்-சார்ந்து
பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளுந்
திரிகோட்ட மாவிரியத் தேர்”
[பு. வெ. முல். பொது. 3]
எனவரும். பரி - செலவு.
37. ஆண்டகையகல அணங்கழியில்வயின் நாண்டுணை யாவுறூஉம்
நாண்முல்லைக்குச்
செய்யுள்:-
“கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின்
பெய்வளை யாட்குப் பிறிதில்லை-வெய்ய
வளிமறையு மின்றி வழக்கொழியா வாயி
னளிமனைக்கு நற்றுணை நாண்”
[பு. வெ. முல். பொது. 4]
எனவரும். வளிமறை - கதவு.
38. புல்வளம்பழித்துப் புரவலற் புகழ்ந்துதம் இல்வளமிகுந்த
இல்லாண்முல்லைக்குச் செய்யுள்:-
“கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
யொல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்த
மிற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப்
புற்செல்வம் பூவா புகழ்”
[பு. வெ. முல். பொது. 5]
எனவரும்.
39. வயலுழுபகட்டொடு மணாளனைமனையாள் பயிலுறப்பொரீஇய
பாட்டுமுல்லைக்குச்
செய்யுள்:-
“உய்த்தல் பொறுத்த லொழிவின் றொலிவயலு
ளெய்த்த லறியா திடையின்றி-வைத்த |