|
படுநுகம் பூண்ட பகட்டொடு மானு
நெடுமொழி யெங்கணவ னேர்” [பு. வெ. முல். பொது. 6]
எனவரும்.
40. மாலைமார்பன் மடந்தையைப் புணர்ந்த பாலைவாழ்த்திய பான்முல்லைக்குச்
செய்யுள்:-
“திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி
யங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட்
குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப்
பயில்வளையை நல்கிய பால்”
[பு. வெ. முல். பொது. 7]
எனவரும்.
41. ஆரமுதத்தினும் அன்பனல்கிய காரட கினிதெனுங் கற்பு முல்லைக்குச்
செய்யுள்:-
“நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட
குய்கொ ளடிசில் பிறர்நுகர்க-வைகலு
மங்குழைக் கீரை யடகு மிசையினு
மெங்கணவ னல்க லினிது” [பு. வெ. முல். பொது. 8]
எனவரும்.
42. மேவருகணவன் தணப்பத்தன்னிறைக் காவல்கூறற்குச் செய்யுள்:-
“மௌவல் விரியு மணங்கமழ் மான்மாலைத்
தையன் முதுகுரம்பைத் தான்றமியள்-செவ்வ
னிறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லா
ணிறைகாப்ப வைகு நிறை”
[பு. வெ. முல். பொது. 9]
எனவரும்.
43. கடிநகரடைந்தவள் அன்னவன் பெருவளனேத்தற்குச்
செய்யுள்:-
“ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி
யாழிசூழ் வையத் தகமலிய-வாழி
கருவரை மார்பினெங் காதல னல்க
வருவிருந் தோம்பு வளம்” [பு. வெ. முல். பொது. 10]
எனவரும். |