பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]99


     44. *கொடுப்போரேத்திக் கொடாஅர்ப் பழித்தற்குச் செய்யுள்:-

    
“சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்துங்
     கார்முகி லன்னார் கடைநோக்கிப்-போர்மிகு
     மண்கொண்ட வேன்மற மன்னரே யாயினும்
     வெண்கொண்ட லன்னாரை விட்டு”
[பு. வெ. ஒழிபு. 1]

எனவரும்.

    
45. வாணிகன்வென்றிக்குச் செய்யுள்:-

    
“காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான்
     சாடுங் கலனும் பலவியக்கி-நீடும்
     பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான்
     கலிகையா னீக்கல் கடன்.”
[பு. வெ. ஒழிபு. 2]

எனவரும்.

     46. உழவன்வென்றிக்குச் செய்யுள்:-

    
“மண்பத னோக்கி மலிவயலும் புன்செய்யுங்
     கண்பட வேர்பூட்டிக் காலத்தா-லெண்பதனுந்
     தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல
     வித்தித் தருவான் விளைவு”
[பு. வெ. ஒழிபு. 3]

எனவரும். எண்பதம் - நெல் வரகு முதலிய எட்டு உணவு.

    
47. மல்லவென்றிக்குச் செய்யுள்:-

   
“கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே
    கொண்டான் பதாகை மறமல்லன்-வண்டார்க்கு
    மாலை துயலு மருவிய 1மாமலையே
    போலுந் திரடோள் புடைத்து”
[பு. வெ. ஒழிபு. 4]

எனவரும்.

    
48. ஏற்றுவென்றிக்குச் செய்யுள்:-

    
“குடைவரை யேந்தியநங் கோவலனே கொண்டா
     னடையவிழ் பூங்கோதை யஞ்சன்-விடையரவ
     மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்
     தின்று நமர்விட்ட வேறு”
[பு. வெ. ஒழிபு. 5]
 

எனவரும்.

  
* இது முதல் வென்றிப்பெருந்திணை யென்பர் பு. வெ. மாலை  
ஆசிரியர்.
  1 மாமலை.